பேருந்து பயணம்...

என் கண்ணுக்குள்ள உன் கண்ண பார்த்தேன்டி...

என் வெட்கத்துல உன் சிரிப்ப ரசிச்சேன்டி...

உன் கைவிரல் தீண்ட துடிச்சேன்டி...

உன் பேரும் ஊரும் தெரிஞ்சிக்க நான், என் ஊர மறந்தேன்டி..

நான் அங்கும் இங்கும் பாத்து உன்ன பாக்க...

நீ ஓர பார்வையில் என்ன பாக்க...

மண்வாசனை இங்க வீசயில, பெண் வாசனை என்ன மயக்குதடி...

கூட்டுக்குள்ள அடஞ்ச கோழிய போல், என் மனசுல அடஞ்சாயடி...

மழைத்துளி எல்லாம் உன்ன தீண்ட, மழையிடும் கோபம் கொண்டேன்டி...

மின்னல் உன்ன பாத்து சிரிக்கையிலே, நான் கருகி போனேன்டி...

நான் வேறொரு பொண்ண பாக்கயில, உன் செருப்பு என்ன மொறைக்குதடி...

இந்த உறவுக்கு பெயரே தெரியாம, நீ தினமும் வாயேன்டி...

Comments