நடைபோடும் பெண்ணே...

சரணம்

நடைபோடும்  பெண்ணே..ஓ பெண்ணே உன்னை பார்க்க எந்தன் விழிகள் ஏங்க...
நீ திரும்பி பார்க்க உன்னை தொடர்ந்தேனே...

உன் முன்னே பறக்கும் அந்த பறவை போல நானே மாறி...
உன்னை பார்க்க பறந்து வந்து நிற்பேனே...

உன் கூந்தல் வாசம் என்னை கட்டி இழுக்கும் கயிறாய் மாற...
கூந்தல் பிடித்து நடை பழகி நான் மிதப்பேனே...

இந்த பெண்ணால் வந்த ஒரு சோதனையாய்...
என் கண்களுக்குள் பிரிவினை வந்ததடி...

இது காமமும் அல்ல காதலும் அல்ல...
தேவதையை பார்க்க ஏங்குதடி... மனம் ஏங்குதடி...

பல்லவி

உன்னை உற்று பார்க்கிறேன்..கண்கள் ஈர்க்குதே..இதழ்கள் சிரிக்குதே..கொள்ளுதடி...

விழிகள் இருந்தும் நான், விழிகள் கேட்கிறேன் கடவுள் வரம் தர வேண்டுமடி...

நீ போகும் தூரங்கள், தூரமாக கால்கள் என்னிடம் கெஞ்சுதடி...

உன் வரிப்பல்ல உதட்டினிலே நான் விழுந்தேன் மீள முடியவில்லை...

இது காமம் அல்ல காதலே என்று சொன்னதடி, இதயம் சொன்னதடி ...

சரணம்

நடைபோடும்  பெண்ணே..ஓ பெண்ணே உன்னை பார்க்க எந்தன் விழிகள் ஏங்க...
நீ திரும்பி பார்க்க உன்னை தொடர்ந்தேனே...

உன் முன்னே பறக்கும் அந்த பறவை போல நானே மாறி...
உன்னை பார்க்க பறந்து வந்து நிற்பேனே...

உன் கூந்தல் வாசம் என்னை கட்டி இழுக்கும் கயிறாய் மாற...
கூந்தல் பிடித்து நடை பழகி நான் மிதப்பேனே...

Comments

Post a Comment