உன் விழியோடு பேசி விளையாடிய நாட்களை எண்ணி,
கண்ணீர் துளிகளோடு காத்துக்கொண்டிக்கிறேன்...
நீ வருவாய் என...
முகத்திரையிட்டு சுற்றித் திரிந்தோம்,
இன்று முகமில்லா திரையோடு காத்துக்கொண்டிக்கிறேன்...
நீ வருவாய் என...
கைகள் மறக்க விரல்கள் பின்னிக்கொண்டிருந்தன,
இன்று விரல்களற்ற கையோடு காத்துக்கொண்டிக்கிறேன்...
நீ வருவாய் என...
கட்டியணைத்தபோது பட படத்த இதயம் கூட,
இன்று துடிக்க மறக்கின்றது...
நீ வருவாய் என...
அறுசுவையும் மறந்தேன் உன் இதழை சுவைக்கையில்,
இன்று சுவை மறந்து காத்துக்கொண்டிக்கிறேன்...
நீ வருவாய் என...
Comments
Post a Comment