தேர்தல் வந்தால்
மக்களின் காலில் விழுந்து சாதியை மறப்பான்...
குருதி தேவையெனில்
குருதியார் சாதியை மறப்பான்...
உண்ணும் உணவில்
உழவனின் சாதியை மறப்பான்...
உடுத்தும் ஆடையில்
நெசவாளனின் சாதியை மறப்பான்...
பரத்தையிடம்
கூடலில் சாதியை மறப்பான்...
தாகத்திற்கு
தண்ணீர் கேட்கையில் சாதியை மறப்பான்...
ஆனால், ஆணவக் கொலை செய்கையில் சாதியை மறவான்...
Comments
Post a Comment