நான் விழித்திருந்தால் மட்டுமே, உன் நினைவுகள் வருகிறது என்றேன்...
நீ உறங்கு, உன் கனவில் வருவேன் என்றாய்..
நீ என்னுடன் இல்லையெனில், தனிமையாக உணர்கிறேன் என்றேன்..
நான் உன் நிழலாக இருப்பேன் என்றாய்...
நான் உன் நிழலாக இருப்பேன் என்றாய்...
உன்னுடன் வாழ வேண்டும், இல்லையெனில் மடிந்து விடுவேன் என்றேன்...
மனைவியாக வந்து உயிர் கொடுப்பேன் என்றாய்...
மனைவியாக வந்து உயிர் கொடுப்பேன் என்றாய்...
குழந்தைகள் கைவிட்ட பின்பு தவிப்பேன் என்றேன்..
உனக்கு குழந்தையாக நான் இருப்பேன் என்றாய்...
உனக்கு குழந்தையாக நான் இருப்பேன் என்றாய்...
முதிர்ச்சியில் இறக்க போகிறேன் என்றேன்...
உனக்கு முன்னால் நான் இறப்பேன் என்றாய்...
உனக்கு முன்னால் நான் இறப்பேன் என்றாய்...
கல்லறையில் நம்மை பிரிப்பார்கள் என்றேன்...
விதையாய் முளைத்து வேரோடு மீண்டும் இணைவேன் என்றாய்...
விதையாய் முளைத்து வேரோடு மீண்டும் இணைவேன் என்றாய்...
Comments
Post a Comment